Log in
     
Uthayakumar Arun mark PDF  | Print |  E-mail
Written by Administrator   

ஜேர்மனி உதயகுமார் அருண் மார்க் சாதனை

கடந்த 2 வருடங்களாக சதுரங்கத்தை விளையாடி வரும் 15 வயதுடைய ஜேர்மனியைச் சேர்ந்த உதயகுமார் அருண் மார்க்,சர்வதேச சதுரங்க சுற்றுப்போட்டி (Zürich Weihnachtsopen 7 சுற்றுக்களில் 4 புள்ளிகளை எடுத்து, 87ஆவது இடத்தைப் பெற்று உள்ளார்.

சுவிஸ் தமிழர் சதுரங்க ஒன்றியம் இதன் மூலம் இவருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்சியடைகின்றது.

ஜேர்மனி உதயகுமார் அருண் மார்க் சாதனை

சூரிச் நத்தார் சர்வதேச சதுரங்க சுற்றுப்போட்டி (Zürich Weihnachtsopen) 35து தடவையாக 26.12 முதல் 30.12. வரை நடைபெற்று முடிந்துள்ளது. இது ஐரோப்பாவில் மிகப் பிரபல்யமான 7 சுற்றுக்களைக் கொண்ட ஒரு சுற்றுப் போட்டியாகும். 2050 புள்ளிகளுக்கு உட்பட்டோருக்கான ஒரு பிரிவாகவும், 2050க்கு மேற்பட்டோருக்கான ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெறும். 218 போட்டியாளர்கள் பங்குபற்றிய முதற் பிரிவில் சேர்பிய நாட்டு வீரர் பொஸ்கோவிச் முதல் இடத்தையும், 133 போட்டியாளர்கள் பங்குபற்றிய மற்றய பிரிவில் ரூமேனிய நாட்டு வீரர் வாஜ்டா முதலிடத்தையும் பெற்றுள்ளனர்.

கடந்த 2 வருடங்களாக சதுரங்கத்தை விளையாடி வரும் 15 வயதுடைய ஜேர்மனியைச் சேர்ந்த உதயகுமார் அருண் மார்க், எமது ஒன்றியத்தால் வருடத்திற்கு இரு முறை நடத்தப்படும் ஒரு நாள் சுற்றுப் போட்டிகளில் கிரமமாகக் கலந்து கொள்பவர். இவ்வருடம் முதன்முறையாக இவர் சூரிச் போட்டியில் கலந்துகொண்டு மிகச் சிறப்பாக விளையாடியுள்ளார்.
1245 புள்ளிகளை மாத்திரமே கொண்ட அருண் மார்க், 7 சுற்றுக்களில் 4 புள்ளிகளை எடுத்து, 87ஆவது இடத்தைப் பெற்று, இவரது சதுரங்கப் பயணத்தில் ஒரு பிரதான சாதனையை நிலைநாட்டியுள்ளார். இதன் மூலம் இவர் அடுத்து வரும் புள்ளிகள் பட்டியலில் 1400 புள்ளிகளைத் தாண்டவுள்ளார். சுவிஸ் தமிழர் சதுரங்க ஒன்றியம் இதன் மூலம் இவருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்சியடைகின்றது.

எமது ஒன்றிய உறுப்பினர் சிவாஜி, 16ஆவது தடவையாக இப் போட்டிகளில் கலந்துகொண்டு 4 புள்ளிகளை எடுத்து, 76ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

www.weihnachtsopen.ch

 

 

Jaffna Chess Open

 

சதுரங்க படங்கள் 2011

Monthly Video

ERROR: A feed could not be found at http://www.referd.info/category/Sports/chess/rss.php

Sponsors - Welcome

ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணங்கள் பதக்கங்கள் பரிசில்களை வழங்க விரும்பும் அல்லது விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் சதுரங்க ஒன்றியத்துடனோ அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும்.

Please Contact:  info@tamilchess.ch

Or phone at +41 78 673 2505

குறிப்பாக போட்டிக் குழுவின் அனுமதிபெற்றவை மட்டுமே தெரிவு செய்யப்படும்!. Read More

NewsLETTER

தமிழர் சதுரங்க சமூகத்தின் ஆர்வத்தையும் திறமைகளையும் வெளிக்கொணரும் செயற்பாடாக "தமிழர் சதுரங்கள்" என்ற சஞ்சிகை வெளிவரவுள்ளது. அனைத்து மொழிகளிலும் இதற்குரிய ஆக்கங்கள் படைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சதுரங்கம் தொடர்பான கவிதை கட்டுரை சித்திரங்கள் துணுக்குகள் மற்றும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் அனைத்து படைப்புகளையும் எதிர்பார்க்கின்றோம். . Read More

RocketTheme Joomla Templates