Log in
     
Sivananthan Kirushanth PDF  | Print |  E-mail
Written by Singam Kandiah   

பேர்ன் சிவானந்தன் கிருஷாந்த் சாதனை

Sivananthan Kirushanth: Berner Junivanantiorenmeister 2012

Trubschachen என்ற இடத்தைச் சேர்ந்த சிவானந்தன் கிருஷாந்த் வெற்றி பெற்று 2012ம் ஆண்டுக்கான Berner Juniorenmeister பட்டத்தைத் தனதாக்கியுள்ளார்.

சுவிற்சர்லாந்தில் ஒவ்வொரு வருடமும் மாநில ரீதியான சதுரங்க சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 18 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியும், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான போட்டியும் நடைபெறும். முதற் பிரிவில் வெற்றி பெறுபவருக்கு Kantonaler Juniorenmeister பட்டமும், மற்றய பிரிவில் வெற்றி பெறுபவருக்கு Kantonalmeister பட்டமும் வழங்கி கௌரவிக்கப்படுவர்.

இவ் வருடம் பேர்ன் மாநில ரீதியான 18 வயதிற்குட்பட்டோர் பிரிவில் Trubschachen என்ற இடத்தைச் சேர்ந்த சிவானந்தன் கிருஷாந்த் வெற்றி பெற்று 2012ம் ஆண்டுக்கான Berner Juniorenmeister பட்டத்தைத் தனதாக்கியுள்ளார். கடந்த 6 வருடங்களாக சதுரங்கத்தை விளையாடி வரும் கிருஷாந்த், எமது ஒன்றியத்தால் வருடத்திற்கு இரு முறை நடத்தப்படும் ஒரு நாள் சுற்றுப் போட்டிகளில் கிரமமாகப் பங்குபற்றுபவர் ஆவார்.

சுவிஸ் தமிழர் சதுரங்க ஒன்றியம் இவருக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், மேலும் சதுரங்கத் துறையில் வளர்ச்சி காண வாழ்த்தி நிற்கின்றது.

 

 

Jaffna Chess Open

 

சதுரங்க படங்கள் 2011

Monthly Video

ERROR: A feed could not be found at http://www.referd.info/category/Sports/chess/rss.php

Sponsors - Welcome

ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணங்கள் பதக்கங்கள் பரிசில்களை வழங்க விரும்பும் அல்லது விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் சதுரங்க ஒன்றியத்துடனோ அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும்.

Please Contact:  info@tamilchess.ch

Or phone at +41 78 673 2505

குறிப்பாக போட்டிக் குழுவின் அனுமதிபெற்றவை மட்டுமே தெரிவு செய்யப்படும்!. Read More

NewsLETTER

தமிழர் சதுரங்க சமூகத்தின் ஆர்வத்தையும் திறமைகளையும் வெளிக்கொணரும் செயற்பாடாக "தமிழர் சதுரங்கள்" என்ற சஞ்சிகை வெளிவரவுள்ளது. அனைத்து மொழிகளிலும் இதற்குரிய ஆக்கங்கள் படைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சதுரங்கம் தொடர்பான கவிதை கட்டுரை சித்திரங்கள் துணுக்குகள் மற்றும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் அனைத்து படைப்புகளையும் எதிர்பார்க்கின்றோம். . Read More

RocketTheme Joomla Templates