Log in
     
WORLD TAMIL BADMINTON NEWS & RESULTS PDF  | Print |  E-mail
Written by Singam Kandiah   

உலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவையினால் முதலாவது பூப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி சென்ற வருடம் சுவிஸ்சர்லாந்தில் நடைபெற்றது யாவரும் அறிந்ததே. இரண்டாவது சுற்றுப்போட்டி 19 / 20.04.2014 ஆகிய இரு தினங்கள் 12 பிரிவுகளாக போட்டிகள் நடாத்தப்பட்டன

19/ 20.04.2014 அன்று காலை 09.00 மணிக்கு நியூலிசுமான் உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, டென்மார்க், சுவிட்சர்லாந்து, நோர்வே, இத்துடன் அவுஸ்ரேலிய நாட்டு வீரர்களும் வந்திருந்தார்கள் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. மங்கல விளக்கினை திரு. குழந்தைவேலு தங்கத்துரை அவர்கள் ஏற்றி ஆரம்பித்து வைக்க அவரைத் தொடர்ந்து சுவிஸ்லாந்து நாட்டிலிருந்து வருகை தந்த சர்வதேச நடுவரான திரு. றோமன் பெஹ்குஸ் அவர்களும்,. உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் ஸ்தாபகர் திரு. கந்தையா சிங்கம் அவர்களும் ஏற்றி வைத்தார்கள்.

பின்னர் அகவணக்கத்துடன்; சிறப்பு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. சிறப்பு மலரினை பிரான்ஸ் நாட்டு தமிழர் உள்ளரங்க விளையாட்டு அமைப்பு“ பூப்பந்தாட்ட நிர்வாகத்தின் தலைவர் திரு. கந்தையா ராஜ்குமார் அவர்களும், ஒருங்கிணைப்பாளரான திரு.த.சிவஸ்ரீ (பாலா) அவர்களும் வெளியீட்டு வைக்க திரு.றோமன் பெஹ்குஸ் அவர்களும், திரு.ரமேஸ் செல்லையா அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.

இதன் பின்னர் பூப்பந்தாட்ட விளையாட்டுக்கள் திட்டமிட்டபடி ஆரம்பமாகின. சுவிஸ்லாந்தில் நடாத்தப்பட்ட போட்டியுடன் ஒப்பிடுகையில் வியக்கத்தக்க வகையில் வீரர்களின் விளையாட்டுத்திறன் மேம்பட்டு இருந்ததை எல்லோராலும் அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக ஜேர்மனி நாட்டிலிருந்து வருகை தந்திருந்த சகோதரிகளான ஜெயராஜா தீபிகா, ஜெயராஜா திரேசா இவர்களின் ஆட்ட நுணுக்கங்களையும், ஆட்டத்திறனையும் அவதானித்த சர்வதேச நடுவர் திரு றோமன் பெஹ்குஸ் அவர்கள் தமிழர்களிடையே சர்வதேச அளவில் விளையாடுவதற்கு வீராங்கனைகள் உருவாகிவிட்டார்கள் என்பதனை எல்லோருக்கும் கூறியதை கேட்கும் பொழுது எம்மினத்திற்கு பெருமை சேர்க்கும் ஒரு விடையமாக கருத முடிந்தது.


இவ்வாறு ஆண் போட்டியாளர்களிடமும் பல போட்டியாளர்கள் இனங்காணப்பட்டார்கள்.

இரண்டாம் கட்டப் போட்டிகள் யாவும் யார் வெல்லுவார்கள் என்பதனை தீர்மானிக்கமடியாத அளவில் விறுவிறுப்பாகவும் நெருங்கமாகவும் இருந்தது..

போட்டியாளர்களுக்கு அந்ததந்த நாட்டிலிருந்து வருகைதந்திருந்த பார்வையாளர்களின் கரகோசம், நாங்களும் சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இருக்கிறோம் என்பதனை உணர்வு ரீதியாக வெளிக் கொண்டுவந்ததை யாரும் மறக்க முடியாது.

கால் இறுதிக்குப் பின்னரான போட்டிகள் யாவும் சர்வதேச தரத்திலானதாக இருந்தது அனைவரையும் மிகவும் வியக்கத்தக்கதாக இருந்தது. எமது இனத்தில் இவ்வளவு காலமும் எங்கிருந்தார்கள் என்ற கேள்வியே அனைவரிடமும் இருந்தது. முதன் முதலாக ஒரு விளையாட்டினை சர்வதேச ரீதியில் ஒருங்கிணைத்து நடந்து வரும் நிகழ்வு இதுதான் என்பதனை அனைவரும் பேசிக் கொண்டார்கள். அனைவரும் உலகத் தமிழர் பூபப்பந்தாட்டச் சம்மேளனத்துக்கு தமது வாழ்துக்களைச் தெரிவித்தனர்


இந்தப்போட்டிக்கு வடக்குக்கிழக்கு மாகாணங்களிலிருந்து நான்கு போட்டியாளர்கள் வருவதாக தீர்மானிக்கப்பட்டு சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் போதிய கால அவகாசம் இன்மையினால் அவர்களுக்கான விசா ரத்துச் செய்யப்பட்டது வேதனைக்குரிய விடையமாகும்.

அத்துடன் இந்த வருட போட்டிகளின் அடிபடையில் தமிழர்களிடத்தே தர வரிசை பட்டியல் ஒன்றை உருவாக்க இருப்பதாக, அதன் ஒருங்கிணைப்பாளரான திரு.த.சிவஸ்ரீ (பாலா) அவர்கள் தெரிவித்தார்

பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த மிகவும் அழகான பெறுமதியான வெற்றிக் கேடையங்களை வீரர்கள் தங்களது நாட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற முனைப்பில் மிகவும் ஆர்வத்தோடு விளையாடினார்கள் என்பதனை விட போராடினார்கள் என்றே சொல்ல வேண்டும்.

பாரிஸ் நகர விளையாட்டுத் துறையை சார்ந்த, திரு GLEIZES JEROME (Conseillers de Paris) திரு GEILLOME MARTINAGE  ( Conseillers Paris 20) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பரிசில்களையும் வழங்கி சிறப்பித்தார்கள். வெற்றிக் கேடயங்களும் பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வீர, வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டது. போட்டிகள் யாவும் இரவு 8.00 மணியளவில் நிறைவு பெற்றது

பணப் பரிசில்களை யும் ஆதரவினையும் பின்வருவோர் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது

DAS FOUNDATION  (CANADA), LILLY SPORTS    (UK),

UNITED INTERNATIONAL CORPORATION (USA), Dr SRISALA SRIRANJAN (CANADA)

PARIS TAMIL.COM    (FRANCE), TAMILCNN .COM (CANADA),

I@D (FRANCE), GOBAL & CO   (FRANCE)

12 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன . அவைகள் பின்வருவன

வெற்றி பெற்ற வீர வீராங்கனைகள் விபரம்


Under 15 Boys

Ravikumar Akas (France)

Jeyarajaratnam Jehyanth (France)

Suthagar Agaran (Switzerland)

Under 15 Girls

Mary Pavanitha Antony Rajah (France)

Asmethaa Asokkumar (United Kingdom)

Laxsha Shan (Germany)

Under 20 Men

Pirathepan Uruthirasingham (France)

Jenushanth Sriramanan (France)

Archanan Hariraman (United Kingdom)

Men Singles Open

Shanmugarasa Thanjeevan (France)

Kristmen Niraj (Canada)

Balasubramaniyam Muralitharan ( Denamark)

Men Doubles Open

Shanmugarasa Thanjeevan / Pratheepan Uruthirasingam (France)

Antony Jesuthasan Jeyakanth / Kristmen Niraj (Canada)

Gowridas Kodeswaran / Benedict Niraj (England)

Girls Open

Theepika Jeyarajah (Germany)

Thiresha Jeyarajah (Germany)

Arshana Shanmugarajah (France)

Girls Doubles Open

Theepika Jeyarajah / Thiresha Jeyarajah (Germany)

Arshana Shanmugarajah / Nalayini Shanmugarajah (France)

Urmila Asokkumar / Kajeena Sooriyakumar (United Kingdom)

Mixed Open

Thiresha Jeyarajah / Anuraj Lingeswaran (Germany)

Urmila Asokkumar / Nixan Kanthasamy (United Kingdom / France)

Bastien Mariyas / Diana Ladilaus (Norway)

Men Over 40

Wijay Mahendran (United Kingdom)

Antony Jesuthasan Jeyakanth (Canada)

Paransothy Shan (Germany)

Men Over 40 Doubles

Wijay Mahendran / Kandiah Lingeswararajah (United Kingdom)

Nirmalan Benedict / Kodeswaran Gowridas (United Kingdom)

Asokkumar Nagamuththu / Niranjan Yegeswaran ( United Kingdom)

Men Over 50

Subash Hurunghee (France)

Kandiah Rajkumar (France)

Ambalavanar Sathiyanathan (United Kingdom)

Men Over 50 Doubles

Kandiah Rajkumar / Camillus Villvarajah (France)

Gunam Sellan / Subash Hirunghee ( Germeny / France)

Ambalavarar Sathiyanathan / Thayaparan Suntharalingam (United Kingdom)

 

 

Jaffna Chess Open

 

சதுரங்க படங்கள் 2011

Monthly Video

ERROR: A feed could not be found at http://www.referd.info/category/Sports/chess/rss.php

Sponsors - Welcome

ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணங்கள் பதக்கங்கள் பரிசில்களை வழங்க விரும்பும் அல்லது விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் சதுரங்க ஒன்றியத்துடனோ அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும்.

Please Contact:  info@tamilchess.ch

Or phone at +41 78 673 2505

குறிப்பாக போட்டிக் குழுவின் அனுமதிபெற்றவை மட்டுமே தெரிவு செய்யப்படும்!. Read More

NewsLETTER

தமிழர் சதுரங்க சமூகத்தின் ஆர்வத்தையும் திறமைகளையும் வெளிக்கொணரும் செயற்பாடாக "தமிழர் சதுரங்கள்" என்ற சஞ்சிகை வெளிவரவுள்ளது. அனைத்து மொழிகளிலும் இதற்குரிய ஆக்கங்கள் படைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சதுரங்கம் தொடர்பான கவிதை கட்டுரை சித்திரங்கள் துணுக்குகள் மற்றும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் அனைத்து படைப்புகளையும் எதிர்பார்க்கின்றோம். . Read More

RocketTheme Joomla Templates